Arts, culture, entertainment and media
விநாயகருக்கு ஆரத்தி தட்டை மாற்றி சுற்றிய சல்மான்கான்; சரி செய்த சகோதரி அர்பிதா - பெண் தோழி பங்கேற்பு
When Bollywood actor Salman Khan was performing *Aarti* for Lord Ganesha, his sister Arpita corrected him after he moved the *Aarti* plate in the wrong direction.

விநாயகருக்கு பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஆரத்தி தட்டை எடுத்து சுற்றியபோது மாற்றி சுற்றியதை அவரது சகோதரி அதனை சரி செய்தார்.
மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. இவ்விழாவில் பாலிவுட் பிரபலங்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர். நடிகர் சல்மான் கான் சகோதரி அர்பிதா தனது வீட்டில் விநாயகரை பிரதிஷ்டை செய்துள்ளார். இதில் சல்மான் கான் கலந்து கொண்டு வழிபட்டார்.
சல்மான் கான் பல ஆண்டுகளாகவே விநாயகர் சதுர்த்தி விழாவில் ஆரத்தி மற்றும் சிலை கரைப்பு உள்ளிட்ட கொண்டாட்டங்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இந்த ஆண்டு சல்மான் கான் தனது சகோதரி வீட்டில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த விநாயகருக்கு ஆரத்தி தட்டில் ஆரத்தி எடுத்தார். அவர் ஆரத்தி தட்டை வலதுபுறமாக சுற்றுவதற்கு பதில் இடதுபுறமாக சுற்றினார்.
இதனை கவனித்த அர்பிதா தனது சகோதரனிடம் வலதுபுறமாக ஆரத்தி தட்டை சுற்றும்படி கேட்டுக்கொண்டார். உடனே தனது தவறை தெரிந்து கொண்ட சல்மான் கான் ஆரத்தி தட்டை வலது பக்கமாக சுற்றினார்.
விநாயகரை தரிசிக்க சல்மான் கருப்பு நிற டி-ஷர்ட், கருப்பு நிறத் தலைக்கவசம் மற்றும் கையில்லாத சாம்பல் நிற ஜாக்கெட் ஆகியவற்றை அணிந்து சாதாரணமான தோற்றத்தில் வந்திருந்தார். அதேசமயம் அர்பிதா பூ வேலைப்பாடுகளுடன் கூடிய பச்சை மற்றும் கருப்பு நிறத்திலான பாரம்பரிய உடையை அணிந்திருந்தார்.
இவ்விழாவில் சல்மான் கானின் நெருங்கிய தோழியான யூலியா வான்டரும் கணபதி கொண்டாட்டங்களில் கலந்துகொண்டார். அவர் சல்மான் கான் குடும்பத்தினருடன் சேர்ந்து ஆரத்தி எடுத்து வழிபட்டார். பல ஆண்டுகளாகவே சல்மானின் குடும்பக் நிகழ்ச்சிகள் மற்றும் பண்டிகை கொண்டாட்டங்களில் யூலியா தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.
சல்மானின் தாயாரான சல்மா கான், ஒரு மகாராஷ்டிர இந்து குடும்பத்தில் சுஷீலா சரக் என்ற பெயரில் பிறந்தவர். அதேவேளையில், அவரது தந்தையான சலீம் கான் ஒரு முஸ்லிம் ஆவார். பல்வேறு மத மரபுகளைச் சார்ந்த பண்டிகைகளைக் கொண்டாடும் குடும்பமாக இவர்கள் நீண்ட காலமாக அறியப்படுகிறார்கள்.!
