Politics
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
திருச்செங்கோடு:திருச்செங்கோடு பழைய பஸ் ஸ்டாண்ட் அண்ணாதுரை சிலை முன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
பழைய பஸ் ஸ்டாண்ட் அண்ணாதுரை சிலை முன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
சார்பில், மாவட்ட தலைவர் பூபதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேட்டூர் அணை உபரி நீரை, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஏரிகளை நிரப்பி
பாசன வசதியையும், நிலத்தடி நீரையும் மேம்படுத்த வேண்டும். கோவில்
நிலங்களில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்களை
வாடகைதாரர்களாக மாற்றி வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும். மின்சார
மசோதா-2025ஐ ரத்து செய்து, விவசாய மின்சாரத்தை தொடர்ந்து
விவசாயத்திற்கு வழங்க வேண்டும்.விண்ணப்பித்த அனைவருக்கும்
உடனடி மின் இணைப்பு வழங்க வேண்டும். வீட்டுமனை கேட்டு விண்ணப்பித்த
அனைவருக்கும் வீட்டுமனை வழங்க வேண்டும். ஏரியில் வண்டல் எடுக்க
விவசாயிகளுக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.