Arts, culture, entertainment and media
‘தங்கமே தங்கமே...’ - பிரிகிடாவுக்கு திருமணம் முடிந்தது!

தமிழ் திரையுலகில் இளம் நடிகர்களாக வலம் வருபவர்கள் ஆனந்த் ராம் மற்றும் பிரிகிடா சாகா. மீசைய முறுக்கு படத்தில் ஆதியின் தம்பியாக நடித்து கவனம் பெற்றவர் ஆனந்த் ராம். அதனால் ரசிகர்கள் ‘மீசைய முறுக்கு தம்பி’ என்று அழைத்து வந்தனர். பிரிகிடா சாகா... யூடியூபில் வெளியான ‘ஆஹா கல்யாணம்’ வெப் தொடர் மூலம் கவனம் பெற்றார். அதில் அவர் நடித்த ‘பவி டீச்சர்’ என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்ததால் ‘பவி டீச்சர்’ என்றே ரசிகர்கள் அழைத்து வந்தனர்.
இவர்கள் இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் அடுத்தகட்டத்திற்குச் சென்றனர். அதாவது திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். மேலும் அதன் புகைப்படங்களை நடிகர் ஆனந்த் ராமின் பிறந்தநாளை முன்னிட்டு இருவரும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் நெகிழ்ச்சியுடன் கூடிய அறிக்கை மூலம் தெரிவித்திருந்தனர். மேலும் இந்தாண்டுக்குள் இருவருக்கும் திருமணம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமண புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பிரிகிடா சாகா, ‘நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்! எங்களுக்குக் கிடைத்த அனைத்து ஆசிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். அதனால் மனம் நெகிழ்ந்து போயுள்ளோம்” எனப் பதிவிட்டுள்ளார். இந்த புதுமண ஜோடிக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)