தர்மபுரி சனத்குமார் ஆற்றில் மழை வேண்டி சிறப்பு யாகம்
தர்மபுரி: தர்மபுரியில் தனியார் அமைப்பு சார்பில், சனத்குமார் ஆற்றில் மழை வேண்டி சிறப்பு யாகம் நேற்று நடந்தது.
தர்மபுரி மாவட்டம், வத்தல்மலையில் தொடங்கும் சனத்குமார் ஆற்றை துாய்மை படுத்தும் பணிகள் நடந்து வரும் நிலையில், அதன் தொடர்ச்சியாக, 201வது நாள் பணிகள் நேற்று தொடங்கப்-பட்டன. மேலும், சனத் குமார் ஆற்றை துார்வாரி, நீர் வழித்தடங்-களை சீரமைக்கும் பணிகள் தடையின்றி நடக்க வேண்டும்.தர்மபுரி மாவட்டத்தில் இந்தாண்டு பருவமழை நல்ல முறையில் பெய்து, நீர்நிலைகள் நிரம்பி விவசாயம் செழிக்க வேண்டும் என்-பதற்காக, தர்மபுரி அருகே அழகாபுரி சனத்குமார் ஆற்றில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, இயற்கை வளங்களை பெரு-கவும், மாவட்டத்தில் வறட்சி நீங்கி, மழை வளம் கிடைக்கவும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.