இந்திய லங்காடி அணிக்கு இரு தமிழக வீரர்கள் தேர்வு

முதுகுளத்துார்: பூடான் நாட்டில் நடைபெறும் லங்காடி விளையாட்டு போட்டியில் இந்திய அணிக்காக விளையாட ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துாரை சேர்ந்த தேவ சித்தம், மதுரையை சேர்ந்த சரண் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா, -பூடான் அணிகளுக்கு இடை யிலான மூன்று போட்டி களைக் கொண்ட லங்காடி போட்டி பூடான் நாட்டில் அக்.,11 முதல் 14 வரை நடைபெற உள்ளது.
மஹாராஷ்டிராவில் தேசிய அளவிலான லங்காடி விளையாட்டு போட்டி நடந்தது. இதில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் முதுகுளத்துாரை சேர்ந்த தேவசித்தம், மதுரையை சேர்ந்த சரண் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இதே போன்று மஹாராஷ்டிரா, குஜராத், கேரளம், ஆந்திரா, தெலுங்கானா, ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 12 வீரர்கள் லங்காடி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு லங்காடி குழுமத் தலைவர் பாலு, தேர்வுக் குழு தலைவர் பாலசுந்தரம், கார்த்திக் வாழ்த்து தெரிவித்தனர்.
பூடான் நாட்டில் நடைபெறும் லங்காடி போட்டி யில் வெற்றி பெற்று இந்திய அணிக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்ப்போம் என வீரர்கள் தேவசித்தம், சரண் கூறினர்.