தொழிலாளியிடம் பணம் பறித்த மூவர் கைது
செங்கல்பட்டு:செங்கல்பட்டில் தொழிலாளியை தாக்கி பணம் பறித்த மூவரை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு சின்ன நத்தம் பகுதியை சேர்ந்தவர் சாகுல் அமீது, 45; கூலி தொழிலாளி.
இவர் கடந்த 3ம் தேதி இரவு செங்கல்பட்டு ஜி.எஸ்.டி., சாலையில் நடந்து வந்தபோது, அவரை வழிமறித்த மூன்று பேர் கும்பல்
கத்தி முனையில் 1000 ரூபாயை பறித்துச் சென்றது.
செங்கல்பட்டு நகர போலீசார் வழக்கு பதிந்து, வழிப்பறியில் ஈடுபட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார், 35, செங்கல்பட்டு நத்தம் பகுதியை சேர்ந்த சந்திரபிரசாத், 36. பரத்குமார், 29, ஆகிய மூவரையும் நேற்று கைது செய்தனர்.