வியட்நாமில் கனமழை நீரில் மூழ்கிய வீடுகள்
ஹனாய், செப். 18– வியட்நாமில் தொடர் கனமழையால், ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தென்
வியட்நாமில் தொடர் கனமழையால், ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
தென் கிழக்காசிய நாடான வியட்நாமில், சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. தலைநகர் ஹனாய், நின் பினா, தான் ஹோவா மாகாணங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு சில பகுதிகளில், 50 செ.மீ., அதிகமான மழை பதிவானது.
இதனால், 2,000-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை கருதி, பள்ளி, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள் மூடப்பட்டு, ஆன்லைன் வகுப்புகள் நடக்கின்றன. ஆயிரக்கணக்கான கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. பல ஆறுகளில் நீர்மட்டம் ஆபத்தான அளவுக்கு உயர்ந்துள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்களை ராணுவ வீரர்கள் மீட்டு வருகின்றனர்.