Politics
தி.மு.க., உதயநிதியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மோகனுார்: 'சிப்காட்' திட்டம் ரத்துக்கு சட்டசபையில் எதிர்ப் பு தெரிவித்த, தி.மு.க.,வைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை கண்டித்து, சிப்காட் எதிர்ப்புக்குழுவினர் நேற்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம், மோகனுார் தாலுகா, வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூர் பகுதிகளில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க, கடந்த தி.மு.க., அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அந்த திட்டத்தை த.வெ.க., அரசு ரத்து செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கேள்வி எழுப்பினார்.
இதை கண்டித்து, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், சிப்காட் எதிர்ப்பு குழுவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.