Education
ரயில்வே ஆட்சேர்ப்பு தேர்வுக்கு பயிற்சி முகாம்
கரூர்:வரும், 11ம் தேதிக்குள், ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் நடத்தும் தேர்வுக்கு பதிவு செய்து கொள்ளலாம் என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக, பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம், 110 காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிவித்துள்ளது. இத்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு, கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக விரைவில் நடத்தப்படவுள்ளது.பயிற்சி வகுப்பில் கால அட்டவணை, நாள்தோறும் சிறுதேர்வு, வாராந்திர தேர்வு, இணையவழி தேர்வு, முழு மாதிரி தேர்வு நடத்தப்பட உள்ளது. பயிற்சி வகுப்பு சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில் நடத்தப்பட உள்ளது. தேர்விற்கு விண்ணப்பித்த மனுதாரர்கள் இரண்டு புகைப்படம், தேர்வுக்கு விண்ணப்பித்த நகல் மற்றும் ஆதார்அட்டை நகலுடன் வரும், 11க்குள் நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 04324-223555, 63830 50010, 63743 19939 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.