வால்பாறைக்கு விலக்கு அளியுங்க!
வால்பாறை: சுற்றுச்சூழல் உணர்திறன் மசோதாவிலிருந்து வால்பாறைக்கு விலக்கு அளிக்க வேண்டும் என எம்.எல்.ஏ., வலியுறுத்தி உள்ளார்.
வால்பாறை எம்.எல்.ஏ., சுதாகர், தமிழ்நாடு சட்ட பேரவை செயலாளரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு வெளியிட்டுள்ள சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டல வரைவு வரைபடத்தில் வால்பாறை இடம் பெற்றிருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசின் இந்த அறிக்கையால், பல தலைமுறைகளாக வால்பாறையில் வசித்து வரும் மக்கள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளை நேரில் ஆய்வு செய்து, சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டல வரைவு வரைபடத்திலிருந்து வால்பாறைக்கு விலக்கு அளிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.