Politics
போலீஸ் செய்திகள்
காய்ச்சலுக்கு வாலிபர் பலி வடமதுரை: அய்யலுார் குப்பாம்பட்டியை சேர்ந்த பெரியசாமி மகன் பொன்னரசு 20. காலில்
வடமதுரை: அய்யலுார் குப்பாம்பட்டியை சேர்ந்த பெரியசாமி மகன் பொன்னரசு 20. காலில் ஏற்பட்டிருந்த வீக்கத்திற்கு சிகிச்சை எடுத்த நிலையில் நேற்று முன்தினம் காய்ச்சல் ஏற்பட்டது. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பொன்னரசு இறந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
நத்தம்: ஏரக்காபட்டியை சேர்ந்த ராமன் மகன் விஜய் 24, படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள நாடக மேடை அருகே மர்மமாக இறந்து கிடந்தார். நத்தம் போலீசார் உடலை கைப்பற்றி கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் பொன்.குணசேகரன் வழக்கு பதிந்து இறப்புக்கான காரணம் குறித்து விசாரிக்கிறார்.