அரசு பஸ் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது
ஓசூர், ;தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே மோட்டாங்குறிச்சியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 55. அரசு
மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே மோட்டாங்குறிச்சியை
சேர்ந்தவர் கோவிந்தராஜ், 55. அரசு டவுன் பஸ் டிரைவர். கடந்த, 6ம் தேதி
மாலை, 5:45 மணிக்கு, ஓசூரிலிருந்து கொலதாசபுரத்திற்கு அரசு டவுன்
பஸ்சை ஓட்டி சென்றார்.
பெரியமுத்தாலி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே
சென்றபோது, வாலிபர்கள் இருவர் சாலையில் நின்றிருந்தனர். இதனால்
டிரைவர் கோவிந்தராஜ், வாலிபர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால்
அவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில், டிரைவர் கோவிந்தராஜை தகாத
வார்த்தையால் திட்டிய வாலிபர்கள், கைகளால் அவரை தாக்கி, பணி செய்ய
விடாமல் தடுத்துள்ளனர்.இதனால், நல்லுார் போலீசில் டிரைவர்
கோவிந்தராஜ் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்படி, முத்தாலியை
சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான நந்து, 20, என்பவரை போலீசார் கைது
செய்து, ஓசூர் ஜே.எம்., 1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஜாமினில்
விடுவித்தனர். பெரிய முத்தாலியை சேர்ந்த தனியார் கல்லுாரி மாணவன்
மனோஜ், 19, என்பவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.