Politics
டயலாக் 2.0!
“நம்ம உடம்புலயே சுகர் இருநூறு, முந்நூறுன்னு ஏறிக்கெடக்கு... நமக்கெல்லாம் இந்தக் கவலை தேவையா?!”

(டயலாக் பகுதியில் இடம்பெறும் நகைச்சுவைத் துணுக்குகளுக்கு தலா ரூ.250 பரிசளிக்கப்படும்)
காஞ்சிபுரம் நீண்டநாள் கழித்துச் சந்தித்துக்கொண்ட நண்பர்கள் இருவர்...
“டேய்... உன் பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணிட்டியா?!”
“இல்லைடா... இந்த ஈரான் போர் முடியட்டும்னு வெயிட் பண்றேன்...”
“போருக்கும் கல்யாணத்துக்கும் என்னடா சம்பந்தம்?!”
“போரால சிலிண்டர் விலை, சர்க்கரை விலையெல்லாம் ஏறிப்போச்சு. கல்யாணச் செலவு ஜாஸ்தியாயிடுமே... அதான்!”
கோவை காந்தி பார்க்கில் இரு முதியவர்கள்...
“சர்க்கரை விலையெல்லாம் இப்படி அநியாயமா ஏறிக்கெடக்கே?”
“நம்ம உடம்புலயே சுகர் இருநூறு, முந்நூறுன்னு ஏறிக்கெடக்கு... நமக்கெல்லாம் இந்தக் கவலை தேவையா?!”
தஞ்சாவூர் பஸ் ஸ்டாண்டில் த.வெ.க ஆதரவாளரும், தி.மு.க ஆதரவாளரும்...
“எங்க தளபதி பேசுற மாதிரி போலி வீடியோ உருவாக்கியிருக்கான் ஒருத்தன்... சி.பி.சி.ஐ.டி போலீஸ் வழக்கு பதிவு பண்ணியிருக்காங்க தெரியுமா?”
“வீடியோ உருவாக்கினவன் ஒரு மடப்பய... அவர் பேசுற மாதிரி வீடியோ உருவாக்குனா டவுட் வராதா!?”
உசிலம்பட்டி நண்பர்கள் இருவர்...
“மச்சான், எனக்கு சென்னையில வேலை கிடைச்சிருக்கு. நாளைக்கு கிளம்புறேண்டா...”
“சூப்பர் மச்சி. வாழ்த்துகள். ஆனா, புது டிரெஸ்ஸெல்லாம் எடுத்துட்டுப் போகாதடா மாப்ளை... போட்டிருக்கற டிரெஸ்ஸோட மட்டும் சென்னைக்குப் போ...”
“ஏண்டா?”
“நம்ம உசிலம்பட்டி எம்.எல்.ஏ வருஷத்துக்கு ஒரு சட்டைதான் நாம வாங்கிப் போட்டுக்கிட்டு இருக்கோம்னு சொல்லியிருக்காரு... அதான் மச்சான்.”
