Economy, business and finance
வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்:வங்கி துறையில் வாரத்தில், 5 நாட்கள் வேலையை அமல்படுத்த கோரியும், பாரபட்சமற்ற பி.எல்.ஐ., திட்டத்தை

துறையில் வாரத்தில், 5 நாட்கள் வேலையை அமல்படுத்த கோரியும்,
பாரபட்சமற்ற பி.எல்.ஐ., திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியும்,
அகில இந்திய அளவில் வேலை நிறுத்தம் இன்று (செப்., 11) வங்கி
தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறுகிறது.
மாலை, நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள பரோடா வங்கி முன் வங்கி
தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேங்கட சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, ராஜா, கோபி ஆகியோர் கோரிக்கை குறித்து
பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம்
எழுப்பப்பட்டன. 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.