குறுவட்ட விளையாட்டுப் போட்டி: மாணவர்கள் பதக்கம் வென்று அசத்தல்
வடலுார்: வடலுார் எஸ்.வி.எஸ்., அகாடமி மாணவர்கள் குறுவட்ட போட்டிகளில் பதக்கம் வென்று அசத்தினர்.
குறிஞ்சிப்பாடி குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள், நெய்வேலி பாரதி ஸ்டேடியத்தில் நடந்தது. போட்டிகளில் பங்கேற்ற வடலுார் எஸ்.வி.எஸ் அகாடமியைச் சேர்ந்த, வடலுார் எஸ்.டி.ஈடன் பள்ளி, நெய்வேலி ஜவகர் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
14 வயதுக்குட்பட்ட பிரிவில் அருள் அரசி 3 தங்கம், பத்ம சரண் 2 தங்கம், பத்மபிரியா 2 வெள்ளி பதக்கங்களும், சஞ்சீவன் 1 வெண்கலமும் வென்றனர். 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கார்ல் ரிச் 1 தங்கம், கிருத்திஷ், ராஜரிஷி தலா 2 தங்கம், 2 வெள்ளி பதக்கங்களும், பிரகதி தங்கம் மற்றும் வெள்ளி தலா 1 பதக்கமும், அனு 3 தங்கம் மற்றும் 3,000 ரூபாய் பரிசும் வென்றனர். தடை தாண்டுதலில் ஸ்வேதா 1 வெள்ளி பதக்கம் வென்றார்.
பதக்கம் வென்ற மாணவர்களை எஸ்.வி.எஸ்.அகாடமி பயிற்சியாளர் செல்வராஜ், பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர். குறுவட்ட அளவில் சாதித்த இந்த மாணவர்கள், மாவட்ட போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.