முதியவரை காரில் கடத்தி செயின், மோதிரம் பறிப்பு

திருநெல்வேலி: தென்காசி மாவட்டம் கடையநல்லுார் மெயின் பஜாரைச் சேர்ந்தவர் சந்தானகிருஷ்ணன் 76. இவர் பஞ்சு மெத்தை வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் மதியம் 3:30 மணியளவில் கடையில் இருந்த அவரை மர்மநபர்கள் காரில் கடத்திச்சென்றனர். காரில் வைத்து அவரது கழுத்தில் இருந்த 15 கிராம் தங்கச்செயின், கையில் அணிந்திருந்த 8 கிராம் மோதிரத்தை பறித்து கொண்டனர். பின் கடையநல்லுார் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே அவரை இறக்கிவிட்டு காரில் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து சந்தானகிருஷ்ணன் கடையநல்லுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, காரின் பதிவு எண்ணை அடிப்படையாக கொண்டு அந்த நபர்களை தேடி வருகின்றனர்.
விசாரணையில் காரில் பயன்படுத்தியது போலி பதிவெண் என தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
