முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் குறைகிறது
கூடலுார்: முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் கடும் வெப்பம் நிலவுகிறது. ஆக.29ல் 122.70 அடியாக இருந்த நீர்மட்டம், அதன் பின் மழை குறைவால் குறைய துவங்கியது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி நீர்மட்டம் 120.90 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 239 கன அடியாக இருந்தது. தமிழகப் பகுதிக்கு குடிநீர் மற்றும் முதல் போக நெல் சாகுபடிக்காக வினாடிக்கு 800 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கடும் வெப்பம் நிலவுவதால் நீர்மட்டம் மேலும் குறையும் வாய்ப்புள்ளது.