Education
1 சிவில் சர்வீசஸ் பயிற்சி தேர்வு எழுதிய 1,077 பேர்
கோவை: சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு, தமிழக அரசு உதவி தொகையுடன் பயிற்சி வழங்குகிறது. இதற்கு ஒவ்வொரு ஆண்டும் தகுதி தேர்வு நடத்தப்படும். இந்தாண்டுக்கான தேர்வு நேற்று நடந்தது.
கோவையில் செயின்ட் மைக்கேல்ஸ் மேல்நிலைப்பள்ளி, சித்தாப்புதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, பிரசன்டேசன் கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீ அவினாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செயின்ட் மேரிஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராஜவீதி அரசு துணி வணிகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி என 6 மையங்களில் தேர்வு நடந்தது.
1,547 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். 1,077 பேர் எழுதினர். 470 பேர் தேர்வு எழுதவில்லை. செயின்ட் மைக்கேல்ஸ் பள்ளியில் பழநியை சேர்ந்த ஸ்ரீராம் என்கிற பார்வை மாற்றுத்திறனாளி தேர்வு எழுதினார்.