சிவராத்திரி பூஜை
கன்னிவாடி, செப்.10- கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக திரவிய அபிஷேகம், 4 கால பூஜைகள் நடந்தது. வாலை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம், மூலவர், ஓம்கார விநாயகர், ஓம்கார நந்தி, பாலதண்டாயுதபாணிக்கு திரவிய அபிஷேகம், மலர் அலங்காரம், தேவார பாராயணத்துடன் மகா தீபாராதனை நடந்தது.
கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், சித்தையன்கோட்டை காசி விசுவநாதர் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.