Arts, culture, entertainment and media
கார் விபத்தில் ஆசிரியை பலி
புதுக்கோட்டை: இரு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், அரசு பள்ளி ஆசிரியை பத்ம பிரியா, 46, உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணத்தைச் சேர்ந்த பத்மபிரியா, அவரது கணவர் மாணிக்கம், 49, ஆகிய இருவரும் நேற்று, புதுக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி காரில் சென்றனர். காரை மாணிக்கம் ஓட்டினார்.
வெள்ளனுார் அருகே, நெடுஞ்சேரி பகுதிக்கு வந்தபோது, சேலத்தில் இருந்து காரைக்குடி நோக்கி, அண்ணாமலை, 35, என்பவர் ஓட்டி வந்த கார், நேருக்கு நேர் மோதியதில், பத்ம பிரியா பலியானார்.