Arts, culture, entertainment and media
அத்திவாக்கம் முகாமில் 56 பயனாளிகளுக்கு ரூ.1.41 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கல்
காஞ்சிபுரம், செப். 10– அத்திவாக்கம் கிராம மக்கள் தொடர்பு முகாமில், 56 பயனாளிகளுக்கு 1.41 கோடி ரூபாய்
அத்திவாக்கம் கிராம மக்கள் தொடர்பு முகாமில், 56 பயனாளிகளுக்கு 1.41 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா நேற்று வழங்கினார்.
காஞ்சிபுரம் அடுத்த, அத்திவாக்கம் கிராமத்தில், மக்கள் தொடர்பு முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமிற்கு, காஞ்சிபுரம் சப் – -கலெக்டர் புவனேஷ்ராம் தலைமை வகித்தார்.
காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வேளாண், தாட்கோ, வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கீழ், 56 பயனாளிகளுக்கு 1.41 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில், காஞ்சிபுரம் கூடுதல் கலெக்டர் ஆசிக் அலி, காஞ்சிபுரம் மகளிர் திட்ட இயக்குனர் ஆர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.