Sport
பள்ளிகளுக்கு இடையே கிரிக்கெட் பெரம்பூர் பள்ளி அணி அசத்தல்
சென்னை, செப். 5– பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில், பெரம்பூரின் கே.ஆர்.எம். பப்ளிக் பள்ளி அணி, ஆறு
பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில், பெரம்பூரின் கே.ஆர்.எம். பப்ளிக் பள்ளி அணி, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், 14 வயதுக்கு உட்பட்ட சென்னை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான, சோமசுந்தரம் கோப்பை கிரிக்கெட் போட்டி, மயிலாப்பூரில் உள்ள செயின்ட் பீட்ஸ் மைதானத்தில் சமீபத்தில் நடந்தது.
முதல் பேட்டிங் செய்த விருகம்பாக்கத்தின் சின்மயா வித்யாலயா பள்ளி அணி, 28 ஓவர்களில், 68 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. பின், களமிறங்கிய பெரம்பூர் கே.ஆர்.எம். பப்ளிக் பள்ளி அணி, 14 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு, 69 ரன்களை அடித்து, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.