மலையப்பன் நகர் பகுதியில் பாலம் அமைக்க கோரிக்கை
குளித்தலை:குளித்தலை மலையப்பன் நகர் மற்றும் காலனி உள்ளிட்ட பகுதிகளில், 3,000க்கும் மேற்பட்ட குடியிருப்பு
மலையப்பன் நகர் மற்றும் காலனி உள்ளிட்ட பகுதிகளில், 3,000க்கும்
மேற்பட்ட குடியிருப்பு உள்ளது. அதன் அருகில் விவசாய நிலங்களும்
உள்ளன.
குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்கு இடுபொருள்கள்,
கட்டுமான பொருட்களை வாகனங்களில் கொண்டு செல்ல பெரியபாலம்,
மீன்கார தெரு வழியாக, ஒன்றரை கி.மீ., வர வேண்டிய நிலை இருந்து
வருகிறது.
தற்போது இந்த பகுதியில், புதிய நகரங்கள் உருவாகி
வருகின்றன. பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி, திருச்சி -
கரூர் நெடுஞ்சாலையில் தென்கரை பாசன வாய்க்காலின் குறுக்கே, மலையப்பன்
நகர் பகுதிக்கு புதியதாக பாலம் அமைத்து தர வேண்டும் என இப்பகுதி
விடுத்துள்ளனர்.