Lifestyle and human interest
ஸ்காலர்ஷிப் அனுப்புவதாக கூறி 5 பேரிடம் ரூ.2.11 லட்சம் பறிப்பு
ஈரோடு:ஈரோடு ரங்கம்பாளையம் கருணாநிதி வீதியை சேர்ந்த முனியப்பன்-காமாட்சி தம்பதி மகன் யுவன், 16; காமாட்சி
ரங்கம்பாளையம் கருணாநிதி வீதியை சேர்ந்த முனியப்பன்-காமாட்சி
தம்பதி மகன் யுவன், 16; காமாட்சி மொபைல் போன் எண்ணை தொடர்பு கொண்ட
ஆசாமி, யுவனுக்கு ஸ்காலர்ஷிப் பணம் வந்துள்ளது.
ஜி.பே., ஆப் இருந்தால், ஓப்பன் செய்து க்யூ ஆர் கோர்டை காட்ட வேண்டும் என
கூறியுள்ளார். இதை நம்பி க்யூ. ஆர் கோடை காட்டிய சில நிமிடங்களில்
அவரது கணக்கில் இருந்து, 23 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது.
சொல்லாமல் உங்கள் ஜி.பேவில் பணம் சேரவில்லை. அருகில் யாராவது இருந்தால்
அவர்கள் ஜி.பேவில் க்யூ.ஆர்., கோடு மூலம் பணம் அனுப்புவதாக
கூறியுள்ளார். இதை நம்பிய காமாட்சி அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும்
நால்வரது க்யூ ஆர் கோடை அனுப்பியுள்ளார். இதில் கோவிந்தசாமி
ரூ.7,400, தினேஷ் ரூ.1,40,000, கார்த்தி ரூ.33,000, பிரதீப் ரூ.8 ஆயிரம்
என, 2.11 லட்சம் ரூபாயை மர்ம ஆசாமி எடுத்துக் கொண்டான். இதுகுறித்த
புகாரின்படி ஈரோடு சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.