தொழிலாளி சடலம் எரிக்கப்பட்ட சம்பவம் 6 மாதம் கழித்து மனைவி போலீசில் புகார்
குருபரப்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே எண்ணேகொல்-புதுார் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி முனியப்பன், 26; கடந்த பிப்., 19ம் தேதி நள்ளிரவில் ராஜா, 44, திம்மராஜ், 26, ஆகியோருடன் எண்ணேகொல்புதுாரில் தென்பெண்ணை ஆற்றில், மின்சாரம் பாய்ச்சி மீன் பிடிக்க சென்றார். அப்போது முனியப்பன் மின்சாரம் பாய்ந்து பலியானார். போலீசார் மற்றும் வருவாய்த்துறைக்கு தெரிவிக்காமல், முனியப்பன் சடலத்தை தகனம் செய்து விட்டனர்.
இந்நிலையில் உயிரிழந்த முனியப்பன் குடும்பத்திற்கும், மற்-றொரு தரப்பினருக்கும் சமீபத்தில் முன்விரோதம் ஏற்பட்டது. இதனால் கணவனை அழைத்து சென்று கொன்று விட்டதாக முனி-யப்பன் மனைவி அகிஷ்னாவுக்கு, 20, சந்தேகம் எழுந்தது. இதை தொடர்ந்து ஆறு மாதம் கழிந்த நிலையில் குருபரப்பள்ளி ஸ்டேஷனில் நேற்று முன்தினம் புகார் செய்தார். இதன் பிறகே சம்பவம் நடந்தது போலீசாருக்கு தெரிந்தது. சாவில் சந்தேகம் இருப்பதாக அகிஷ்னா புகாரில் குறிப்பிட்டுள்-ளதால், போலீசார் மற்றும் வருவாய்த்துறைக்கு தெரியாமல் சட-லத்தை எரித்ததாக, ராஜா, திம்மராஜ், சின்னபையன், குமார், சந்தன், மகேஷ்குமார், சாரதி, மது, திம்மராயன், சிம்மூர்த்தி, சிவக்-குமார் உட்பட பலர் மீது, குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்ப-திவு செய்துள்ளனர்.