Politics
டூவீலர்கள் மோதல் வாலிபர் பலி
விருதுநகர்: விருதுநகர் கே.கே.எஸ்.எஸ்.என்., நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் 21.
இவர் நேற்று இரவு 8:30 மணிக்கு டூவீலரில் (ஹெல்மட் அணியவில்லை) மல்லாங்கிணர் ரோட்டில் பாண்டியன் நகரில் சென்றார். அப்போது எதிரே டூவீலரில் வந்த கே.கே.எஸ்.எஸ்.என்., நகரைச் சேர்ந்த ஜான் காலேப் 18, நவீன் பிரகாஷ் 21, ஆகியோர் மீது மோதியதில் சந்தோஷ் குமார் பலியானார். மற்ற இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஊரகப்போலீசார் விசாரிக்கின்றனர்.