Politics
பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கரூர்:கரூரில் உள்ள பா.ஜ., அலுவலகத்தில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். பிரதமர் மோடி பிறந்த நாள்
விழா, இரண்டு நாள் நடக்கும் மாவட்ட பயிற்சி முகாம் மற்றும் புதிய
நிர்வாகிகள் நியமனம் ஆகியவை சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது.
வரும், உள்ளாட்சி தேர்தலில் கரூர் மாவட்டத்தில், 100க்கும் மேற்பட்ட
இடங்களில், பா.ஜ., வெற்றி பெற வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாநில துணைத் தலைவர் ராமலிங்கம், நாமக்கல் மாவட்ட முன்னாள் தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் சக்தி
முருகன், மாவட்ட பொதுச் செயலர்கள் உமாதேவி, சாமிதுரை, மாவட்ட
செயலாளர்கள் முருகேசன். வெங்கடாசலம், மோகன்ராஜ், ராஜா பிரதீப்,
பங்கேற்றனர்.