மங்களூரு - சென்னை ரயில் அக்டோபர் வரை நீட்டிப்பு
சேலம்: மங்களூரு - சென்னை எழும்பூர் ரயில் திங்கள்தோறும் மாலை, 4:00 மணிக்கு மங்களூருவில் புறப்பட்டு, பாலக்காடு வழியே நள்ளிரவு, 12:18க்கு போத்தனுார், அதிகாலை, 1:28க்கு திருப்பூர், 2:10க்கு ஈரோடு, 3:17க்கு சேலம் வந்து, ஜோலார்பேட்டை, காட்-பாடி, அரக்கோணம் திருவள்ளூர், பெரம்பூர் வழியே எழும்பூ-ருக்கு காலை, 10:55க்கு சென்றடைகிறது.
அதன் மறுமார்க்க ரயில், செவ்வாய்தோறும் மதியம், 2:00 மணிக்கு எழும்பூரில் புறப்பட்டு, இரவு, 7:37க்கு சேலம், 8:35க்கு ஈரோடு, 9:28க்கு திருப்பூர், 10:43க்கு போத்தனுார் வந்து, அடுத்தநாள் காலை, 8:40க்கு மங்களூருவை அடைகிறது. இந்த ரயில் சேவைகள் நடப்பு வாரத்துடன் முடியவிருந்த நிலையில், தற்போது அக்டோபர் வரை நீட்டித்து, அதற்கான டிக்கெட் முன்பதிவு நடந்து வருவதால், பயணியர் பயன்படுத்திக்-கொள்ளலாம் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்-துள்ளது.