5 பேர் மீது வழக்கு
நிலக்கோட்டை: அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டி மகன் மருதுபாண்டி 30. இவருக்கும் மதுரையைச் சேர்ந்த அபிராமிக்கும் 23, 2021ல் திருமணம் நடந்தது. அபிராமி, வரதட்சணை கேட்டு தனது கணவர் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாக அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். கணவர் மருதுபாண்டி, அவரது தந்தை சுந்தரபாண்டி, தாய் வசந்தி, உறவினர்கள் அமுதவள்ளி, வடிவேலு ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கொடைக்கானல்: பூம்பாறையை சேர்ந்தவர்கள் மனோன்மணி 62, லோகேஸ்வரன் 24. இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. மனோன்மணி, அவரது மருமகள் ரோட்டில் வந்தபோது லோகேஸ்வரன் தகராறு செய்து கத்தியால் மனோன்மணி கழுத்தில் கிழித்தார். படுகாயம் அடைந்த அவர் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். லோகேஸ்வரனை கொடைக்கானல் போலீசார் கைது செய்தனர்.