Arts, culture, entertainment and media
எம்.பி.,யானதை மறந்துட்டாரோ?

தே.மு.தி.க., ராஜ்யசபா எம்.பி.,யான சுதீஷ், சமீபத்தில் பத்திரிகையாளர்களை வேலுாரில் சந்தித்தார்.
அப்போது அவரிடம், 'மேட்டூர் அணையை திறக்க முதல்வர் சென்று வந்தார். மக்களுடைய வரிப்பணத்தில் பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனரே' என, நிருபர் ஒருவர் கேட்டார்.
அதற்கு, 'நீங்க தான் சொல்றீங்க... முதல்வரை வரவேற்க அரசு பணம் வெட்டியாக செலவழிக்கப்பட்டால், கண்டிப்பாக அது தவறு தான். தி.மு.க.,வும் சரி, அ.தி.மு.க.,வும் சரி, இப்படி எல்லாம் பண்ணியதால் தான், அவங்களுக்கு மக்கள் ஓட்டு போடல; அதே தவறை முதல்வர் விஜயும் செய்தால், 2029ல் மக்கள் சரியான பாடம் புகட்டுவர்' என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், 'தி.மு.க., கூட்டணியில் இருந்தாலும், சந்தடி சாக்குல அவங்களையும் குறை சொல்றாரே' என முணுமுணுக்க, மற்றொரு நிருபர், 'தி.மு.க., தயவில் தான் ராஜ்யசபா எம்.பி.,யாகியிருக்கோம் என்பதை மறந்துட்டாரோ?' என்றபடியே அங்கிருந்து நகர்ந்தார்.