Politics
கடலில் கொந்தளிப்பு மீனவர் மாயம்

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே மண்டபம் கடலில் சூறாவளியால் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் படகில் இருந்த மீனவர் தயாளன் 38, தவறி கடலில் விழுந்து மாயமானார்.
செப்., 2ல் மண்டபம் வடக்கு கடற்கரையில் இருந்து அப்பகுதியைச் சேர்ந்த ஆசிர் சாமுவேல் விசைப்படகில் மீனவர்கள் தயாளன் 38, நவீன், பாண்டியன், சகாயராஜ், இருதயராஜ் ஆகியோர் மீன்பிடிக்கச் சென்றனர்.
இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்த போது, திடீரென சூறாவளி வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் படகில் இருந்த மீனவர் தயாளன் நிலை தடுமாறி கடலுக்குள் விழுந்தார்.
படகில் இருந்த மற்ற மீனவர்கள் அவரை கடலில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் அன்றிரவே மீனவர்கள் சோகத்துடன் மண்டபம் கரை திரும்பினார்கள். இந்நிலையில் மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதியுடன் நேற்று காலை மற்றொரு விசைப்படகில் மீட்புக் குழு மீனவர்கள் காணாமல் போன மீனவரை தேடி நடுக்கடலுக்கு சென்றனர்.