பரளச்சி –- மேலையூர் சந்திப்பில் செயல்படாத ஹைமாஸ் விளக்கு
திருச்சுழி: திருச்சுழி அருகே பரளச்சி –- மேலையூர் சந்திப்பில் ஹைமாஸ் மின்விளக்கு எரியாமல் இருப்பதால் வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
திருச்சுழி அருகே பரளச்சி -– மேலையூர் ரோடு நான்கு வழி பாதையாக மாற்றும் பணிகள் ரூ.23 கோடியில் நடந்தது. இதில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களை இணைக்க கூடிய ரோடாக உள்ளது. 3 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இந்த ரோட்டை பயன்படுத்தி செல்வர். ஓராண்டிற்கு முன், சந்திப்பில் ரூ.10 லட்சத்தில் ஹைமாஸ் மின்விளக்கு அமைக்கப்பட்டது. நான்கு வழிச்சாலை பணிக்காக சந்திப்பில் இருந்து மின்கம்பம் அகற்றப்பட்டது.
ஆனால் ரோடு பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வந்த நிலையில், நான்கு மாதங்களுக்கு மேல் ஆகியும் சந்திப்பில் விளக்கு பொருத்தப்படவில்லை. இரவு நேரங்களில் வாகனங்கள் வந்து செல்வோர் சந்திப்பு அருகில் இருட்டாக இருப்பதால் விபத்து ஏற்படுகிறது. டூவீலர்களின் வந்து செல்வோர் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின்றனர். அதன் பின் விளக்கு அமைக்கப்பட்டது. ஆனால், 20 நாட்களாக எரியாமல் மின்கம்பம் காட்சி பொருளாக உள்ளது.
ஊராட்சி நிர்வாகம் ஹைமாஸ் மின்விளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.