Economy, business and finance
தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்துக்கு சொந்தமான நிலம் வரும் 18ல் ஏலம்
கரூர்:தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்துக்கு
முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், தனியார்
மார்க்கெட்டிங் நிறுவனத்துக்கு சொந்தமான நிலம் வரும், 18ல் ஏலம்
குமரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாவட்டம், தில்லை நகரில் இயங்கி வந்த தனியார் மார்க்கெட்டிங்
நிறுவனத்திற்கு சொந்தமான அசையா சொத்தான கரூர் மாவட்டம், குளித்தலை
அருகே கல்லடையில், 42 சென்ட் பரப்பளவுள்ள நிலத்தை வரும், 18 காலை
10:00 மணியளவில் தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சட்டத்தின்
கீழ், கரூர் அலுவலகத்தில் ஏலம் விடப்படுகிறது. ஏலம் கோர விரும்பும்
நபர்கள் அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கரூர் டி.ஆர்.ஓ.,
பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், 25,000 ரூபாய் வங்கி
வரைவோலையினை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், அசையா சொத்து மற்றும் ஏல
நிபந்தனை விபரங்களை www.karur.nic.in என்ற இணையளத்தில் காணலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.