Politics
போதை பொருள் விற்பனை மூன்று வாலிபர்கள் கைது
பெருந்துறை:பெருந்துறை, ஈரோடு ரோட்டிலுள்ள ஒரு லாட்ஜில், திருப்பூர், கோவையை சேர்ந்த சிலர் போதை பொருட்கள்
ஈரோடு ரோட்டிலுள்ள ஒரு லாட்ஜில், திருப்பூர், கோவையை சேர்ந்த சிலர்
போதை பொருட்கள் விற்பனை செய்வதற்காக வந்திருப்பதாக, பெருந்துறை
போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார், அங்கு தங்கியிருந்த மூவரிடம் சோதனை மேற்கொண்டனர்.
அதில், விற்பனைக்கு வைத்திருந்த போதை பொருட்களை பறிமுதல்
செய்தனர்.திருப்பூர், ராக்கியபாளையம் அப்துல்கலாம், 24,
தூத்துக்குடி மாவட்டம், சிவந்தாகுளத்தை சேர்ந்த அரவிந்த்ராஜ், 30,
பொள்ளாச்சி, தில்லை நகரை சேர்ந்த சந்தோஷ்குமார், 23, என மூவரை கைது
செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.