முதல்வரை பார்க்க சென்ற சிறை வார்டனுக்கு மெமோ
சேலம்: சேலம் மத்திய சிறை, மோப்பநாய் பிரிவில் வார்டனாக பணிபுரி-பவர் கவின். இவர் கடந்த, 1 காலை, வேலைக்கு வந்து கையெ-ழுத்திட்டுவிட்டு, மேட்டூர் அணை திறக்க வந்த, முதல்வர் விஜயை பார்க்க, அதிகாரிகளுக்கு தெரியாமல் சென்றதாக புகார் எழுந்தது. சிறை அதிகாரிகள் விசாரணையில், கவின், அவருக்கு பதில் வேறு ஒருவரை பணிக்கு அமர்த்திவிட்டு சென்றது தெரிந்-தது.
இதுதொடர்பாக சிறை எஸ்.பி., வினோத் விசாரித்து, கவினுக்கு, 'மெமோ' கொடுக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக ஜெயிலர் சிவானந்தம், சீப் ஹெட் வார்டன் ஜெயபாண்டி, உதவி ஜெயிலர் நித்யானந்தம் ஆகியோருக்கும், நேற்று முன்தினம், 'மெமோ' வழங்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.