கனரக வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
கரூர்:கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனுார் சாலையில், கனரக வாகனங்கள் செல்வதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
மாநகர பகுதிகளில் இருந்து திண்டுக்கல், திருச்சி, மதுரை பைபாஸ் சாலைகள்,
கோடங்கிப்பட்டி, ஈசநத்தம் போன்ற பகுதிகளுக்கு அனைத்து வாகனங்களும்
திருமாநிலையூர், ராயனுார் வழியாக செல்கிறது. திருமாநிலையூர் பகுதியில்
இருந்து, குறிப்பிட்ட துாரம் வரை சாலை குறுகலாக உள்ளது. இதனால் வாகன
போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கனரக வாகனங்கள் வந்து செல்வதால், மற்ற வாகனங்கள் எளிதாக செல்ல முடியாமல்
போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே, போக்குவரத்துக்கு இடையூறு இன்றி
வாகனங்கள் வந்து செல்ல, நடவடிக்கை எடுக்க வேண்டும்.