அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படி உயர்த்தி வழங்கக்கோரி முதல்வருக்கு மனு
கரூர்:கரூர் மாநகராட்சி, கடவூர், அரவக்குறிச்சி தாலுகாவில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படி
மாநகராட்சி, கடவூர், அரவக்குறிச்சி தாலுகாவில் பணிபுரியும் அரசு
ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படி உயர்த்தி வழங்க வேண்டும் என முதல்வர்
விஜய்க்கு, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்
சங்க மாநில தலைவர் மலைக்கொழுந்தன் மனு அனுப்பியுள்ளார்.
பல ஆண்டுகளாக நகர்ப்புற வளர்ச்சி, வீட்டு வாடகை, அத்தியாவசிய
பொருட்களின் விலை மற்றும் குடும்ப செலவு கணிசமாக உயர்ந்துள்ளது.
கரூர் மாவட்டத்தின் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் வீட்டு வாடகை
படி மறுநிர்ணயம் செய்யப்படவில்லை. கடந்த, 2021ல், கரூர்
மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனால், வீட்டு வாடகை மற்றும்
வாழ்க்கை செலவுகள் தொடர்ந்து அதிகரித்துள்ளன.
பகுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, தற்போதைய
நிலவரத்துக்கு ஏற்றபடி வாடகை படி வழங்கப்படவில்லை.
அரவக்குறிச்சி, கடவூர் ஆகிய தாலுகாவிற்கு வழங்கப்படும் வீட்டு வாடகை
படி மிகவும் குறைவாக உள்ளது. இப்பகுதிகளில் அரசு ஊழியர்கள்,
ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் வீட்டு வாடகை சுமையை, அரசு தனியாக ஆய்வு
செய்ய வேண்டியது அவசியமாகும். தற்போதைய மாநகராட்சி,
தாலுகாவுக்கு ஏற்ப வீட்டு வாடகை படியை உடனடியாக உயர்த்தி வழங்க
வேண்டும்.
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.