வாலிபர் அடித்துக் கொலை; 3 பேருக்கு போலீஸ் வலை
தென்காசி: தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரையில், மது போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
சாம்பவர் வடகரை இல்லத்தார் தெருவைச் சேர்ந்தவர் சத்யன் 35. நேற்று சுடுகாடு பகுதியில் தனது கூட்டாளிகள் மூவருடன் மது அருந்தினார்.
அப்போது ஏற்பட்ட தகராறில் சத்யனை 3 பேரும் கடுமையாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த சத்யன் உயிரிழந்தார்.
தகவலறிந்த மாவட்ட எஸ்.பி., அசோக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
சத்யனுடன் மது அருந்திய கருப்பசாமி, சுப்பிரமணி (எ) மண்டமணி, ஐயப்பன் ஆகிய மூன்று பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.