திமுகவினரை பார்த்தாலே ஊழல் தான் ஞாபகம் வரும்; அமைச்சர் அருண்ராஜ் பதிலடி

திருப்பூர்: திமுகவினரை பார்த்தாலே ஊழல் தான் ஞாபகம் வரும் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நிருபர்களிடம் அமைச்சர் அருண்ராஜ் கூறியதாவது: உறுப்பு மாற்று எனபது ஒரு முக்கியமான ஒன்றாக இருக்கிறது; மருத்துவ சேவையாகவும் இருக்கிறது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள நிறைய பேர் பதிவு செய்துவிட்டு காத்திருப்பு பட்டியலில் இருக்கிறார்கள். நமது அரசில் அனைத்து துறைகளை போலவும், மருத்துவ துறையிலும் உறுப்பு மாற்று இந்த பிரிவு வந்து முழுக்க முழுக்க வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும்.
காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்கப்படும். உறுப்பு மாற்றம் செய்வதை வியாபாரமாக செய்வதை பார்த்து கொண்டு இந்த அரசு சும்மா இருக்காது. ஒவ்வொரு திமுக முன்னாள் அமைச்சர்களை பிரசாரத்தில் மக்கள் பார்க்கும் போது அவர்கள் செய்த ஊழல் தான் மக்கள் கண் முன் வரும்; திமுக முன்னாள் அமைச்சர்களின் பிரசார வருகை தவெகவின் வெற்றியை எளிதாகும். இவ்வாறு அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
அமைச்சர் அருண்ராஜ் பரபரப்பு பேட்டி; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு