Politics
த.வெ.க., அரசுக்கு இ.கம்யூ., கண்டனம்
சென்னை: இ.கம்யூ., - எம்.பி., சுப்பராயன் வெளி யிட்ட அறிக்கை: கிராமப்புற உள்ளாட்சி வரை, அதிகாரப் பரவல் நீடிக்க வேண்டும். அதிக அதிகாரத்தை உள்ளாட்சிகளுக்கு வழங்க வேண்டிய அவசியமும், தேவையும் அதிகரித்துள்ள நிலையில், இருக்கிற அதிகாரத்தையும் த.வெ.க., அரசு பறித்து விட்டது.
விவசாய நிலத்தை, விவசாயம் அல்லாத பயன்பாட்டிற்கு வகை மாற்றம் செய்யும் அதிகாரத்தை, கிராம சபையிடமிருந்து, அதாவது, மக்களிடமிருந்து பறித்துக் கொண்ட த.வெ.க., அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.