Politics
ஆசிரியர் தின விழா
மானாமதுரை: மேலநெட்டூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
விழாவில் டாக்டர்.ராதாகிருஷ்ணனின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.மகிழ் முற்றத்தின் தகவல் தொடர்பு மாணவ அமைச்சர் விகாஷினி வரவேற்றார்.முல்லை திணையின் மாணவ தலைவர் சந்தியா ஆசிரியர்களை வாழ்த்தி பேசினார். சுற்றுச்சூழல் துறை மாணவ அமைச்சர் தமிழ்நேயன் தலைமையில் ஆசிரியர்களுக்கு விளையாட்டுப்போட்டி நடத்தப்பட்டு சுகாதாரத்துறை மாணவ அமைச்சர் கதிர் தலைமையில் பரிசு வழங்கப்பட்டது. பாலை திணை தலைவர் ரஞ்சனி நன்றி கூறினார்.