Politics
“மாநில உரிமைகள்; ஆய்வு செய்யவே பயந்து நடுங்கும் தவெக அரசு” – உதயநிதி ஸ்டாலின்
மாநில உரிமைகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட உயர்நிலைக்குழுவை தவெக அரசு முடக்குவது வெட்கக்கேடானது என உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், “மாநில உரிமைகள் குறித்து பேசுவதற்கும், போராடுவதற்கும் பயப்படும் த.வெ.க அரசு, அது குறித்து ஆய்வு செய்யவே பயந்து நடுங்கி ஆணையத்தை முடக்குவது வெட்கக்கேடானது” எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “ஓய்வுபெற்ற நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் ஒன்றிய – மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்து ஆராய்வதற்காக நம் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசால் அமைக்கப்பட்ட உயர்நிலைக்குழுவை முடக்கும் வேலைகளில் ஆளுங்கட்சி இறங்கி இருப்பது கண்டிக்கத்தக்கது.
பணியாளர்கள் பற்றாக்குறையால் இந்தக்குழு தொடர்ந்து செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால், மாநில சுயாட்சி குறித்த குழுவின் 2-ஆவது ஆய்வு அறிக்கையை தயார் செய்து வந்த ஆய்வாளர்களும் – ஆராய்ச்சி மாணவர்களும் தொடர்ந்து செயல்பட முடியாத சூழலை இந்த Dummy அரசு உருவாக்கி இருக்கிறது.
ஓய்வுபெற்ற நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் ஒன்றிய – மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்து ஆராய்வதற்காக நம் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான அரசால் அமைக்கப்பட்ட உயர்நிலைக்குழுவை முடக்கும் வேலைகளில் ஆளுங்கட்சி இறங்கி இருப்பது கண்டிக்கத்தக்கது.
மாநில உரிமைகள் குறித்து பேசுவதற்கும், போராடுவதற்கும் பயப்படும் த.வெ.க அரசு, அது குறித்து ஆய்வு செய்யவே பயந்து நடுங்கி ஆணையத்தை முடக்குவது வெட்கக்கேடானது. Reels போட்டால் மட்டும் மாநில சுயாட்சியை நிலைநாட்ட முடியாது என்பதை உணர்ந்து, ஒன்றிய – மாநில அரசுகளின் உறவு பற்றி ஆய்வு செய்யும் உயர்நிலைக்குழு, தொய்வின்றி செயல்படுவதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
AI-ல் ஒரு வீடியோ உருவாக்க.. எவ்வளவு தண்ணீர் செலவாகும் தெரியுமா?
AI இயங்குவதற்கு ஆயிரக்கணக்கான பிரத்யேக Chips 24 மணி நேரமும் இயங்க வேண்டும்.
இவை மிகக் குறுகிய காலத்தில் கடுமையான வெப்பத்தை வெளியிடும்.
அந்த வெப்பம் எவ்வளவு? எவ்வளவு தண்ணீர் செலவாகும் அதற்கு?
