Crime, law and justice
வக்கீல் சங்க கூட்டுக்குழு தேர்தல் வரும் 26ம் தேதி நடத்த முடிவு
கோவை: தமிழகம், புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டுகுழுவிற்கு கடந்த டிச., 20ல் தேர்தல் நடக்க இருந்தது. தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இடைக்கால தடையால், தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தலுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை ரத்து செய்து மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவிட்டது.
வக்கீல் சங்கங்களின் கூட்டுக்குழு தலைவர் பி.நந்தகுமார் கூறுகையில்,‘‘தேர்தலை மீண்டும் நடத்த திருப்பூரில் செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் தேர்தலை வரும் 26ம் தேதி, கும்பகோணத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 10 பேர் கொண்ட தேர்தல் அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் மண்டபம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்,’’ என்றார்.