Sport
ஐரோப்பிய கால்பந்து திருவிழா..! இன்றிரவு தொடங்கும் சாம்பியன்ஸ் லீக் போட்டிகள்!

ஐரோப்பியாவில் நடைபெறும் 72-ஆவது சீசன் சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் குறித்து...
சாம்பியன்ஸ் லீக் 72ஆவது சீசனின் போஸ்டர். - படம்: எக்ஸ் / சாம்பியன்ஸ் லீக்.
ஐரோப்பியாவில் நடைபெறும் 72-ஆவது சீசன் சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் இன்றிரவு (இந்திய நேரப்படி இரவு 10.15 மணிக்கு) தொடங்கவிருக்கின்றன. இந்தப் போட்டிகளை சோனி லைவ் செயலியிலும் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.
ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் மிகப்பெரிய கால்பந்து கிளப் அணிகளுக்கான கோப்பையான சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் இன்றுமுதல் (செப்.8) தொடங்குகின்றன. முதல் போட்டியில் ஆஸ்டன் வில்லா அணியும் கிளப் புரூஜ் அணியும் மோதுகின்றன.
முதன்முதலாக 1955ல் தொடங்கப்பட்ட இந்தப் போட்டிகள் 1992ல் பெயர் மாற்றப்பட்டது. பின்னர், கடந்தாண்டு முதல் பிளே ஆஃப் விதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. கடந்த சீசனில் பிஎஸ்ஜி அணி கோப்பை வென்றது.
இந்த சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் ஸ்பெயினின் லா லிகாவில் விளையாடும் ரியல் மாட்ரிட் அணி 15 முறை கோப்பை வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அடுத்ததாக ஏசி மிலன் 7 முறையும் பயர்ன் மியூனிக், லிவர்பூல் தலா 6 முறையும் பார்சிலோனா 5 முறையும் வென்றுள்ளன.
நடப்பு சீசனில் 36 அணிகள் மோதும் இந்தப் போட்டிகள் இன்று (செப்.8) முதல் தொடங்கி ஜூன் 5ஆம் தேதி மாட்ரிட் திடலில் முடிவடைய இருக்கின்றன.
பிஎஸ்ஜி அணி மூன்றாவது முறையாக வென்று வரலாறு படைக்குமா அல்லது மற்ற அணிகள் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
A European football extravaganza! Champions League matches kick off tonight!
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.