ஹேக் ஹசீனா கட்சியின் தலைவர்களுக்கு ம@ண தண்டனை; நேரில் ஆஜராகாத போதிலும் தீர்ப்பு

வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதன் நீட்சியாக, அங்கு ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. அந்த சமயத்தில், வங்கதேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று டாக்காவில் இருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அவர் இன்றுவரை இந்தியாவில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த 7 மூத்த தலைவர்களுக்கு வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் – 2 நேற்று (15-09-26) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி முகமது நஸ்ருல் இஸ்லாம் சவுத்ரி தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இந்த ஏழு பேருக்குமான தீர்ப்பை வழங்கியுள்ளது.
அவாமி லீக் பொதுச் செயலாளரும், முன்னாள் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சருமான ஒபைதுல் குவாடர், இணைப் பொதுச் செயலாளர் ஏ.எப்.எம். பஹாவுதீன் நசிம், முன்னாள் தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் முகமது அலி அரபாத் ஆகியோர் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் அடங்குவர்.
அதே போல, ஜூபோ லீக் தலைவர் ஷேக் பஸ்லே ஷம்ஸ் பராஷ், பொதுச் செயலாளர் மைனுல் ஹொசைன் கான் நிகில், வங்கதேச சத்ரா லீக் தலைவர் சதாம் ஹுசைன், பொதுச் செயலாளர் ஷேக் வாலி ஆசிஃப் எனன் ஆகியோருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் யாரும் விசாரணைக்கு நேரில் ஆஜராகாத நிலையிலும், இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தின் போது, போராட்டங்களை ஒடுக்க முயன்றது, ஊடகங்களைக் கட்டுப்படுத்த முயன்றது போன்ற குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. இந்த குற்றச்சாடுகள் நிரூபிக்கப்பட்டதால் தலைமறைவாக இருந்த 7 பேருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது வங்க தேச அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)