மின்வேலியில் சிக்கி விவசாயி பலி
அரூர்:நிலக்கடலை வயலில் அமைத்த மின்வேலியில் சிக்கி, விவசாயி பலியானார்.
தர்மபுரி மாவட் டம், அரூர் அடுத்த செங்காண்டிப்பட்டியை சேர்ந்தவர் ஏழுமலை, 42. விவசாயி; இவரது மனைவி அழகி, 34. இவர், தானிப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். தம்பதிக்கு, 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு ஏழுமலை மூங்கில் கொம்புகளை எடுக்க அவரது பக்கத்து தோட்டத்தை சேர்ந்த கோவிந்தராசு, 52, என்பவரது நிலத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது, காட்டுப்பன்றிகள் தொல்லையை தடுக்க நிலக்கடலை தோட்டத்தை சுற்றி அமைத்திருந்த மின்கம்பியில் ஏழுமலையில் கால்கள் பட்டுள்ளது.
இதில், மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே ஏழுமலை பலியானார். புகார் படி, கோட்டப்பட்டி போலீசார், கோவிந்தராசுவை கைது செய்தனர்.