பூங்குணம் பகுதியில் குரங்குகள் நடமாட்டம்

சித்தாமூர்: பூங்குணம் காட்டுப்பகுதியில் குரங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
சித்தாமூர் பகுதியில் மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு இடையே மாநில நெடுஞ்சாலை உள்ளது. அதை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மதுராந்தகம், செங்கல்பட்டு, புதுச்சேரி போன்ற பகுதிகளுக்கு செல்ல பயன்படுத்துகின்றனர்.
பூங்குணம் காட்டுப்பகுதியில் மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு நெடுஞ்சாலை ஓரத்தில் உணவு தேடி குரங்குகள் கூட்டம் கூட்டமாக உலா வருவது அதிகரித்து வருகிறது.
இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாலையில் குரங்கள் உலா வருவது தெரியாமல் விபத்துகள் ஏற்படுகின்றன.
எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, குரங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில், எச்சரிக்கை பலகைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.