எலும்புக்கூடு உரக்கூடம்

சோழவந்தான்: நெடுங்குளத்தில் மண்புழு உரக்கூடம் பராமரிப்பின்றி எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது.
இங்கு நெடுங்குளம் ரோட்டில் 15வது நிதிக்குழுமானியம் 2021---22ல் ரூ.1.45 லட்சம் மதிப்பீட்டில் மண்புழு உரக்கூடம் அமைக்கப்பட்டது. இதில் ஊரகப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை தரம் பிரிக்கப்பட்டு மட்கும் குப்பையை பயன்படுத்தி மண்புழுக்கள் மூலம் உரம் தயாரிக்கப்பட்டது. சில மாதங்களிலேயே பணிகள் கைவிடப்பட்டு உரக் கூடம் பாழடைய தொடங்கியது.
மேலும் இரும்பு கம்பிகளால் சட்டம் அமைக்கப்பட்டு மேலே தகர கூரை அமைக்கப்பட்டது. தற்போது தகரக் கூரையின்றி இரும்புக் கம்பிகள் எலும்பு கூடாக காட்சியளிக்கிறது. மேலும் வெயில், மழையில் காய்ந்து துருப்பிடிக்கின்றன.இதனால் அரசு நிதி வீணாகிறது. ஒன்றிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.