Arts, culture, entertainment and media
SIIMA 2026 | ‘டூரிஸ்ட் ஃபேமிலி’க்காக சசிகுமாருக்கு விருது… ‘காந்தா’வுக்காக சமுத்திரக்கனிக்கு விருது!

‘காந்தா’ திரைப்படத்திற்காக நடிகர் சமுத்திரக்கனி சிறந்த துணை நடிகர் (தமிழ்) விருதை வென்றுள்ளார்.
SIIMA 2026 விருது விழாவில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்திற்காக நடிகர் சசிகுமார் விருது பெற்றுள்ள நிலையில், ‘காந்தா’ திரைப்படத்திற்காக நடிகர் சமுத்திரக்கனி சிறந்த துணை நடிகர் (தமிழ்) விருதை வென்றுள்ளார்.
அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் இலங்கை தமிழர் கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சசிகுமார். இந்தப் படத்துக்காக 2026-வது SIIMA விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருது சசிகுமாருக்கு வழங்கப்பட்டது.
அதேபோல, செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான படம் ‘காந்தா’. இந்தப் படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான SIIMA விருது சமுத்திரகனிக்கு வழங்கப்பட்டது. நடிப்பில் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பயணித்து வரும் சமுத்திரக்கனி, வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’, மற்றும் ராஜன் வகையறா , முத்தையா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘இருளன்’ படங்களில் நடித்து வருகிறார் சமுத்திரகனி.
மேலும், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘மைசா’, பூஜா அபர்ணா கொல்லூரு இயக்கத்தில் அக்ஷய் கண்ணா நடிக்கும் ‘மகாகாளி’, மன்சு மனோஜ் உடன் டேவிட் ரெட்டி மற்றும் கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கும் ‘NBK 111’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
