மாநில செயற்குழு கூட்டம்
தேனி:தேனியில் தமிழக கூட்டுறவுத்துறை நடுநிலை அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.
இதில் மாநில தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார் பொதுச் செயலாளர் மோகன் முன்னிலை வகித்தார். பழைய ஓய்வூதியத்திட்டம் அமல், தென்காசி, செங்கல்பட்டு போன்ற புதிதாக உருவான மாவட்டங்களில் கூடுதல் பணியிடங்களை உருவாக்குதல், சனி, ஞாயிறு கிழமைகள், விடுமுறை நாட்களில் பணி செய்ய கட்டாயப்படுத்துவதை தவிர்த்தல், கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை நடத்துதல் உள்ளிட்ட 40 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பொருளாளர் முத்தையா, இணை பொது செயலாளர் சீனிவாச பெருமாள், மாவட்ட தலைவர் சரவணகுமார், செயலாளர் முனிராஜா பங்கேற்றனர்.